/* */

சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தல் தரும் பந்துமுனை பேனா

விண்வெளி வீரர்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பால் பாயிண்ட் பேனா. இன்று மை போட்டு எழுதும் பேனாக்களை பயன்பாட்டில் இல்லாமல் செய்துவிட்டது

HIGHLIGHTS

சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தல் தரும் பந்துமுனை பேனா
X

எழுதப் படிக்கத் தெரிந்தவன் என்றால், அவன் பையில் பேனா இருக்க வேண்டும். இதுதான் எழுதப்படாத விதியாக இருந்தது. கத்தி முனையைவிடப் பேனா முனைக்கு வலிமை அதிகம். பேனா முனையால் எதையும் சாதிக்க முடியும் என பேனாவின் பெருமைகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்போதெல்லாம் எல்லோர் கையிலும் ஆறாம் விரல் போல் இங்க் பேனா முளைத்து இருந்த காலம். ஏதோ காரணத்தால் பேசாமல் இருந்த வகுப்பு தோழன், எழுதி கொண்டிருக்கும் போது இங்க் தீர்ந்து போக, 'பெஞ்ச்'ல் உதறிய ஒரு துளி இங்க்கை உறிஞ்சி எழுதும் போது மீண்டும் துளிர்க்கும் நட்பு, பேனா நட்பு. இந்த பேனாக்களில் அதிகம் தேய்மானம் என்றால் தன் நிப் மட்டுமே, மற்றபடி இங்க்கை நாம் எப்போதும் ஊற்றிக் கொள்ளலாம்.

ஆனால், இன்று பார்க்கும் இடங்களில் எல்லாம் பால்பாயின்ட் பேனாக்களின் ஆதிக்கம்தான். மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் பால்பாயின்ட் பேனாக்களால்தான் எழுதி வருகின்றனர். நிப் தேய்ந்தால் பழைய நிப்பை அகற்றிவிட்டுப் புதிய நிப்பை மாட்டி, அதே பேனாவைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்று பால்பாயின்ட் பேனாவை ஒருமுறை மட்டும் பயன்படுத்தி, தூக்கி எறிந்துவிட்டு புது பால்பாயின்ட் பேனா வாங்குகிறோம்.

நாம் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பந்துமுனை பேனா சுற்றுப்புறச் சூழலை சீரழிக்கும் கோடரியாக மாறியுள்ளது என்பது தெரியுமா?

அதிலும் தற்போது "யூஸ் அண்ட் த்ரோ" அதாவது உபயோகித்து தூக்கி எறியும் வகை பேனாக்கள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களும் அவைகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

முன்பெல்லாம், ரீஃபில் தீர்ந்தவுடன், அதை மட்டுமே தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் ரீஃபில்லை அதில் போட்டு மீண்டும் பயன்படுத்துவோம். ரீஃபில் பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதால், அது மட்டுமே பிளாஸ்டிக் கழிவாகக் கருதப்பட்டது. இப்போது உறுதியான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட, பால் பாயிண்ட்பேனாக்கள் பிளாஸ்டிக் கழிவுகளாகிவிட்டன. இவை நாம் தெரிந்தே உருவாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்.

இந்தப் பேனாக்களில் இருக்கும் உலோகத்தால் ஆன முனை, உள்ளே ஒட்டியிருக்கும் மை, காரணமாக மறுசுழற்சி செய்வதில் பல பிரச்னைகள் உள்ளன. அதனால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பேனாக்கள் மக்காத கழிவாக மாறி மெல்லக் கொல்லும் விஷமாகப் பரவி வருகிறது.

சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டிற்கும், உலக வெப்பமயமாதலுக்கும் வளரும் நாடுகளைக் குறை சொல்லும் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் தூக்கி எறியப்படும் பேனாக்கள், சுமார் கோடிக்கும் மேல் உள்ளது

பால் பாயிண்ட் பேனாக்களை, இதர பிளாஸ்டிக் பொருள்களைப்போல் மறுசுழற்சி செய்வது கடினம். சாதாரண பிளாஸ்டிக் கழிவுகள் மக்கிப் போக பல நூற்றாண்டு பிடிக்கும். இந்த பால் பாயிண்ட் பேனா கழிவுகள் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மக்கிப் போகாது. இவை நிரந்தரக் கழிவுகளாக அப்படியே நிற்கும்.

Updated On: 5 Oct 2022 4:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  3. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  4. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  5. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...
  6. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  7. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  8. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  9. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  10. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...