இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை: எஸ்.ஆர்.எம் நிறுவனத்தில் 3 கட்டமாக நுழைவு தேர்வு

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை: எஸ்.ஆர்.எம்  நிறுவனத்தில் 3 கட்டமாக நுழைவு தேர்வு
X
வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் மாணவர்கள் சேர 'ஆன்லைன்' வழியில் நுழைவு தேர்வு நடத்தப்படும்.

எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, 3 கட்டமாக நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னை காட்டாங்கொளத்துார் பிரதான வளாகம், வடபழனி, ராமாபுரம்; டில்லி என்.சி.ஆர்., வளாகங்கள், ஆந்திரா, ஹரி யானாசோனாபட் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

இவற்றில் வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் மாணவர்கள் சேர 'ஆன்லைன்' வழியில் நுழைவு தேர்வு நடத்தப்படும். வரும், 2022ம் ஆண்டில் முதற்கட்டமாக ஜனவரி, இரண்டாம் கட்டமாக ஏப்ரல், மூன்றாம் கட்டமாக ஜூனில் நுழைவு தேர்வு நடக் கும். இதற்கு ஆன்லைன் வழியில் விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.

எஸ்.ஆர்.எம்., தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேரும், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். எஸ்.ஆர்.எம்.,கல்வி நிறுவன மாணவ, மாண விகளுக்கு, சர்வதேச அளவிலான முன்னணி கார்பரேட் நிறுவனங்கள், நல்ல ஊதியத்துடன் பணி வாய்ப்புக்களை வழங்குகின்றன. இந்த ஆண்டில்மட்டும், 7,100க்கும் மேற்பட்டவர்பணி வாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story