சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை
பைல் படம்
கடந்த 2021ம் ஆண்டு வங்கியில் ரூ.225 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் இயங்கி வந்த தனியார் நிறுவனமான ஓசியானிக் எடிபிள் இன்டர்நேஷனல் லிமிடெட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்துடன் தொடர்பான 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜோசப் ராஜ் ஆரோக்கியசாமி, விமலா ஜோசப் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் வால்டர் ஆரோக்கியசாமி, டாமினிக் சாவியோ ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
ரூ.104 கோடி கடன் பெற்று அதை முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில், 225 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி வங்கிகளுக்கு இழப்பீடு ஏற்படுத்தியுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிபிஐ வழக்கு பதிவுசெய்ததன் அடிப்படையில், கடன் வாங்கிய பணத்தை மத்திய அரசு அனுமதியின்றி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்துள்ளதாகவும் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் வந்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஓசியானிக் எடிபிள் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், அமைந்தகரை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu