/* */

செந்தில் பாலாஜிக்காக கொத்தனார், சமையல்காரர் வேலை பார்த்த அமலாக்க துறை

minister Senthil Balaji, Enforcement Directorate, mason and cook worked for Senthil Balaji arrestசெந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக கொத்தனார், சமையல் காரர் வேலை பார்த்த அமலாக்க துறை அதிகாரிகள் பற்றி தகவல் கிடைத்து உள்ளது.

HIGHLIGHTS

செந்தில் பாலாஜிக்காக கொத்தனார், சமையல்காரர் வேலை பார்த்த அமலாக்க துறை
X

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் கொத்தனார் ஆகவும், சமையல்காரர் ஆகவும் வேலை செய்து தகவல்கள் திரட்டியது பற்றிய அரிய தகவல் கிடைத்துள்ளது.


minister Senthil Balaji, Enforcement Directorate, mason and cook worked for Senthil Balaji arrestதி.மு.க. அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அவரது தம்பி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். கரூர், சென்னை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது கரூரில் அவரது தம்பி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றபோது அவர்களது கார் தாக்கப்பட்டது.

minister Senthil Balaji, Enforcement Directorate, mason and cook worked for Senthil Balajiஇந்த சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் தற்போது நேற்று முன்தினம் செந்தில் பாலாஜியின் கரூர் வீடு மற்றும் சென்னையில் உள்ள வீட்டில் மத்திய அரசின் ‘என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட்’ எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

வீட்டில் சோதனை நடத்திவிட்டு தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் இந்த சோதனை நடைபெற்றது. தமிழக அரசின் வரலாற்றில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை நிறுத்தவில்லை. செந்தில் பாலாஜியின் வீட்டில் காலையில் தொடங்கிய சோதனை நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது. ஆரம்பத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என பேட்டி அளித்த செந்தில் பாலாஜி நள்ளிரவு 2 மணி அளவில் அடம் பிடிக்க தொடங்கினார். அதிகாரிகள் அவரை கைது செய்வதாக அறிவித்ததும் திடீரென அவர் தரையில் விழுந்து அழுது புரண்டு நெஞ்சு வலிப்பதாக துடிதுடித்தார்.

minister Senthil Balaji, Enforcement Directorate, mason and cook worked for Senthil Balaji arrestஉடனடியாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய போலீசார் பாதுகாப்புடன் ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் பிரச்சனை நடைபெற்றது. ஆனாலும் அவரை அதிகாரிகள் அங்கு அனுமதித்து சிகிச்சை அளித்தனர். செந்தில் பாலாஜியின் இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் மூன்று இடங்களில் அடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவ அதிகாரிகள் சான்றிதழ் அளித்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை உடல்நிலை காரணமாக அமலாக்க துறை அதிகாரிகளால் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்த முடியவில்லை.

minister Senthil Balaji, Enforcement Directorate, mason and cook worked for Senthil Balaji arrestஅதனை தொடர்ந்து சென்னை செசன்ஸ் கோர்ட் நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடக் கோரி தி.மு.க. தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

minister Senthil Balaji, Enforcement Directorate, mason and cook worked for Senthil Balaji arrestஇந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ரத்த குழாய்களில் செல்லும் குழாய்களில் அடைப்பு இருப்பதால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதுவும் காவேரி தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டும் என தி.மு.க. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்த ஒரு இடத்திற்கு சோதனை என்ற பெயரில் சென்றாலும் வலுவான ஆதாரங்கள் இல்லாமல் இறங்க மாட்டார்கள் என்பது பொதுவான ஒரு கருத்து. அந்த அடிப்படையில் தான் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட ஆதாரங்களையும் ஒருநாள் இரண்டல்ல பல நாட்களாக சி.ஐ.டி. வேலை பார்த்துஅமலாக்க துறை அதிகாரிகள் சேகரித்து இருக்கிறார்கள்.

minister Senthil Balaji, Enforcement Directorate, mason and cook worked for Senthil Balaji arrestசெந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் தான் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு தேவையான ஆதாரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

minister Senthil Balaji, Enforcement Directorate, mason and cook worked for Senthil Balaji arrestகரூர் புறநகர் பகுதியில் செந்தில் பாலாஜி பிரம்மாண்டமாக ஒரு வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கொத்தனாராக சில நாட்களாக வேலை பார்த்து செந்தில் பாலாஜி தொடர்பான முக்கியமான தரவுகளை சேகரித்து இருக்கிறார். இன்னொரு அதிகாரியோ செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான நண்பரான கரூரில் கொங்கு மெஸ் நடத்தும் நபரின் உணவகத்தில் சமையல்காரர் வேலை பார்த்து ஆதாரங்களை திரட்டி இருக்கிறார். இந்த தகவல்கள் இப்போதுதான் மெதுவாக கசிய ஆரம்பித்திருக்கிறது.

minister Senthil Balaji, Enforcement Directorate, mason and cook worked for Senthil Balaji arrestஆகவே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவது போல் மிரட்டுவதற்காகவோ சலசலப்புக்காகவோ செய்யவில்லை. உரிய ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். ஆதலால் செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் பிடியில் இருந்து அவ்வளவு எளிதாக தப்ப முடியாது. முதலை வாயில் சிக்கிய நிலைமைதான் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜியின் மீதான இந்த நடவடிக்கை என்பது தொடக்கம் தான். இதன் முடிவு டெல்லி திகார் சிறை வரை கூட செல்லும் என்கிறார்கள் அமலாக்க துறையோடு நெருக்கமான அதிகாரிகள் வட்டாரத்தினர்.

Updated On: 17 Jun 2023 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  2. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  3. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  5. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  6. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  7. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  8. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  10. லைஃப்ஸ்டைல்
    வட துருவ ஒளியின் மாயாஜாலம்!