தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: மணல் மாஃபியாக்கள் சிக்குவார்களா?

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை:  மணல் மாஃபியாக்கள் சிக்குவார்களா?
X

மணல் கொள்ளை - காட்சி படம் 

தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் கும்பலை ஒடுக்க அமலாக்கத்துறையினர் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் வீடுகள் மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருடைய அலுவலகம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதைபோல கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணல் அள்ளுவதற்கான உரிமம் வைத்திருக்கும் தொழிலதிபர்கள் எஸ் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் ரத்தினம் ஆகியோர் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil