சென்னையில் மார்ச் 12ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: 800 காலிப்பணியிடங்கள்
பைல் படம்.
சென்னையில் மார்ச் 12ம் தேதி பன்னாட்டு நிறுவனங்கள் கலந்துகொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணைப் பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.கே.ஸ்ரீராக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , மத்திய அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. 800 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இந்த முகாமில் 20-க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்களும், சென்னையைச் சுற்றியுள்ள நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஏதாவது ஒரு பட்டம் அல்லது பட்டயம், ஐடிஐ, பொறியியல் பட்டம் ஆகிய கல்வித் தகுதி உடைய சென்னையைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 30 வரை.
வேலைவாய்ப்பு முகாமிற்கு வருவோர் தன் விவர குறிப்புகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் வர வேண்டும்.
இந்த முகாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், (சாந்தோம் சர்ச் அருகில்) சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை என்ற முகவரியில், 2022 மார்ச் 12 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu