சென்னை ஐஐடி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்: 45 சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்றன

சென்னை ஐஐடி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்: 45 சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்றன
X

சென்னை ஐஐடி வளாகம் (பைல் படம்)

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மைக்ரோசாஃப்ட் இந்தியா, பஜாஜ் ஆட்டோ உட்பட பல முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் வேலைகள் வழங்கின.

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த முதல் கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், இதுவரை இல்லாத அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

முதல் கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 1,085 வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன. கடந்த டிசம்பர் 10ம் தேதியுடன் முடிவடைந்த முதல்கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், பதிவு செய்த மாணவர்களில் 73 சதவீதம் பேர் வேலை பெற்றனர்.

இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சி 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்தியில் தொடங்கும். முதல் கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், 45 சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்றன. இதுவும் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

முதல் கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், மொத்தம் 226 நிறுவனங்கள் பங்கேற்று, 1,085 வேலைகளை வழங்கின. மேலும், 62 தொடக்க நிறுவனங்கள் 186 வேலை வாய்ப்புக்களை வழங்கின.

முதல் கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சிக்கு முன்பே, பயிற்சி பெற்றவர்களில் 231 பேர் வேலைவாய்ப்பை பெற்றனர். ஆக மொத்தம், முதல் கட்ட நேர்காணல் முடிவில் 1,316 பேர் வேலை பெற்றனர். 2021-22ம் ஆண்டுக்கான முதல்கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், மொத்தம் 1,500 மாணவர்கள் பதிவு செய்தனர்.

முதல்கட்ட வேலைவாய்ப்பு குறித்து, சென்னை ஐஐடி-யின் வேலைவாய்ப்பு ஆலோசகர் பேராசிரியர் சி.எஸ்.சங்கர் ராம் கூறுகையில், சென்னை ஐஐடி பயிற்சியின் தரம் மற்றும் மாணவர்களின் ஒட்டு மொத்த மேம்பாடு ஆகியவை இந்தாண்டு முதல் கட்ட வேலைவாய்ப்பில் பிரதிபலிக்கின்றன. எங்கள் மாணவர்களுக்கு வேலை வழங்கிய நிறுவனங்களுக்கு ஐஐடி வேலைவாய்ப்பு குழு சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். 2ம் கட்ட வேலை வாய்ப்பில், இன்னும் அதிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளோம்'' என்றார்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மைக்ரோசாஃப்ட் இந்தியா, பஜாஜ் ஆட்டோ உட்பட பல முன்னணி நிறுவனங்கள் முதல் கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் வேலைகள் வழங்கின.

Tags

Next Story
ai future project