காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் செய்த 10 வயது சிறுமி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் செய்த 10 வயது சிறுமி
X

10 வயது சிறுமி ஜல்பாரிசாயி

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 10 வயது சிறுமி 3615 கிலோ மீட்டர் மேற்கொண்ட சைக்கிள் பயணத்தை குமரியில் நிறைவு செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கம் மாவட்டம் தானேவை சேர்ந்தவர் ஜல்பாரிசாயி (10), ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியான இவர் காஷ்மீரில் இருந்து கடந்த 38 நாட்களுக்கு முன்பு சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, பெண்மையை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளுக்கு கற்பியுங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடங்கிய சைக்கிள் பயணத்தை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர், சேலம், மதுரை, நெல்லை வழியாக இன்று முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு நேற்று நிறைவுசெய்தார்.

38 நாட்களுக்குள் 3615 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்த சிறுமிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story