Emotional farewell- பணி ஓய்வு பெற்ற ‘பாசக்கார’ டிரைவர்; ஸ்டீரியங்கில் முத்தமிட்டு, பிரேக்குக்கு கும்பிடு போட்டு பிரியாவிடை

Emotional farewell-  பணி ஓய்வு பெற்ற ‘பாசக்கார’ டிரைவர்; ஸ்டீரியங்கில் முத்தமிட்டு, பிரேக்குக்கு கும்பிடு போட்டு பிரியாவிடை
X

Emotional farewell- தன் நீண்ட கால ‘பயண’ தோழனுக்கு, பிரியாவிடை கொடுத்த ‘பாசக்கார’ பஸ் டிரைவர். 

Emotional farewell-தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து டிரைவர் ஸ்டீயரிங்கில் முத்தமிட்டு, பஸ்சை கைகளால் அணைத்துக்கொண்ட வீடியோ வைரலானது.

Emotional farewell, Tamil Nadu State Transport driver kisses steering wheel, Tamil Nadu State Transport driver hugs bus, State Transport Driver Gets Emotional On Retirement Day, Tamil Nadu State Transport driver trending news, trending news today in tamil, today news in tamil- மதுரையில், பணி ஓய்வு நாளில், உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடை தந்த டிரைவரின் வீடியோ தற்போது, வைரலாகி வருகிறது.


வாழ்க்கை பயணத்தில், மிக முக்கியமானது ஒருவரது பணி; மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என குடும்பம் இருந்தாலும், ஒவ்வொரு மனிதருக்கும், அவர் செய்யும் தொழில்தான் அடையாளம். பள்ளி, கல்லூரியில் படிக்கும் வரை மாணவர், திருமணமாகி விட்டால் கணவர், பிள்ளைகள் பிறந்து விட்டால் தந்தை என, வாழ்க்கையில் பல நிலைகளில், மனிதர் ஒவ்வொரு அடையாளத்தை கொண்டிருந்தாலும், அவரது நிலையான அடையாளமாக இருப்பது அவர் செய்யும் பணிதான்.

அந்த வகையில், தனது நீண்ட கால வாழ்க்கை பயணத்தில், ஒரு பஸ் டிரைவராக இருந்தவர், அவரது நீண்ட கால தோழராக, உடன் பயணித்த பஸ்சை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, தொட்டு வணங்கி விடைபெற்ற வீடியோ, இப்போது தமிழகத்தில் வைரலாகி வருகிறது.


அது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநரான 60 வயது முத்துப்பாண்டியின் ஓய்வு நாள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரையில் திருப்பரங்குன்றம், அனுப்பானடி, திருநகர், மகாலட்சுமி காலனி வழித்தடங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ்சில், முத்துப்பாண்டி டிரைவாக பணிசெய்தார். இப்போது, 60 வயதான நிலையில், ஓய்வு பெறும் காலகட்டத்தை நெருங்கினார். தனது நெடுநாள் தோழனான பேருந்தின் மீதுள்ள ஆழ்ந்த பாசத்தை வெளிப்படுத்தும் போது உணர்ச்சிகள் அவருக்குள் பெருகுகின்றன. அவர் டிரைவர் சீட்டின் முன் இருக்கிற ஸ்டியரிங்கை முத்தமிடுவதும், பிரேக், ஆக்ஸிலேட்டர், கிளட் ஆகியவற்றை தொட்டு வணங்கி, கீர் போடும் லிவரை தொட்டு வணங்கியதும், படிக்கட்டுகளை தொட்டு கும்பிட்டு, பஸ்சின் மீது நெஞ்சுடன் சாய்ந்து ஆரத் தழுவுவதும் இதயப்பூர்வமான தருணத்தில் காணப்படுகிறது.


வாழ்க்கை பயணத்தில், ஒரு சகாப்தத்தின் முடிவையும், அர்ப்பணிப்புள்ள டிரைவருக்கும் அவரது விசுவாசமான இயந்திரத்திற்கும் இடையே உள்ள நேசத்துக்குரிய பிணைப்பைக் குறிக்கும் வகையில், முத்துப்பாண்டி பணிவுடன் பஸ்சின் புட்போர்டைத் தொட்டு மரியாதை செலுத்துவது போன்ற தொடும் காட்சிகள் அந்த வீடியோவில் தொடர்கிறது.

மனிதர்கள் நன்றி .உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதுவும், வாழ்க்கை பயணத்தில் ஒரு இயந்திரமாக மட்டும் இல்லாமல், தன் உற்ற தோழராக பயணித்த பஸ் மீது முத்துப்பாண்டி காட்டி அன்பும், பாசமும் போற்றுதலுக்குரியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!