/* */

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு
X
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளில் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.

18வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த மாதம் 16 ம்தேதி அறிவித்தார். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் 4 தினங்களே உள்ளன.

பொதுவாக தேர்தல் தேதிக்கு 49 மணி நேரத்திற்கு முன்னதாக பிரச்சாரம் நிறைவடைய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. அந்த வகையில் 17ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இந்த முறை மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல கட்சிகள் பாடுபட்டு வருகின்றன.

அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் நாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் ஓயும். அந்த வகையில் வரும் 17ஆம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. வழக்கமாக மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓயும். ஆனால் இந்த முறை கோடை வெயிலை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. அதன்படி 17ஆம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் ஓய்கிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும் நாளை மாலையுடன் பூத் சிலிப் வழங்கும் பணிகள் முடிவடையும்.

நாளையே தபால் வாக்கு அளிக்க கடைசி நாளாகும். அது போல் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 15 April 2024 11:03 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு