சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரணம்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  எடப்பாடி பழனிசாமி நிவாரணம்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி பொருட்களை வழங்கினார்.

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகள் மட்டும் இன்றி தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள்.

மேலும் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி வீட்டிலிருந்து வெளியே வர முடியாதவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் படகு மூலம் மீட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள். ஆனாலும் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் மக்கள் சாலைகளில் வந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை பெருங்குடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர் அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய எடப்பாடி பழனிசாமி 2015 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது அதற்கு முன்னதாகவே தொகுதி வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முன்னேற்பாடு பணிகளை அ.தி.மு.க .அரசு செய்தது .ஆனால் இந்த பணியை தற்போதைய அரசு செய்ய தவறிவிட்டது. இதன் காரணமாகத்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் நீரை வடிய வைப்பதற்கு என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து இயந்திரங்கள் வாங்கப் போவதாக கூறுகிறார்கள். இவர்கள் எப்போது வாங்கி எப்போது தண்ணீரை வெளியேற்றுவது என தெரியவில்லை என்றார்.

Tags

Next Story