தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரமாண பத்திரம் தாக்கல்..!

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரமாண பத்திரம் தாக்கல்..!
X

அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமியைத் தான் அ.தி.மு.க., ஒற்றை தலைமையாக கொண்டு வரவேண்டும் என பொதுக்குழு, செயற்குழுவினர் 2,441 பேர் தங்களது ஆதரவை பிரமாணப்பத்திரம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தினர்.

அ.தி.மு.க கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி ஜூலை 11 ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2,441 பேரின் ஆதரவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்ட்டுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business