தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை

40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தமிழகத்தில்  40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை
X

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை முழுமையாக குறி வைத்துள்ள மத்திய அமலாக்கத்துறை பல்வேறு கட்டங்களாக தமிழ்நாட்டில் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலில் தலையிட்ட அமலாக்கத்துறை அவர் தொடர்பாக பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து சோதனைகளை நடத்தி ஆவணங்கள் பறிமுதல் செய்து வருகிறது. அரசியல் ரீதியாக பழிவாங்க அமலாக்கத்துறையை பாஜக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மணல் குவாரிகள், அதை இயக்குபவர்கள் வீடுகள் ஆகியவற்றை குறி வைத்து சோதனைகளை நடத்தியது. அதிலும் ஏராளமான ஆவணங்கள் சொத்து விபரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்களைக் குறி வைத்து இன்றைய சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.

இதன்படி, சென்னை தியாகராய நகர் சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் இன்று காலை 5.30 மணியளவில் அமலாக்க துறையினரின் சோதனை நடந்து வருகிறது. இதேபோன்று, ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பகுதிகளிலும், சென்னை தி.நகரில் உள்ள விஜய் அபார்ட்மெண்ட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் துறையினர் உள்பட பல்வேறு நபர்களிடம் சோதனையிடப்படுகிறது. தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சண்முகம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

கடந்த 20-ந்தேதி சென்னையில் 30 இடங்கள் உள்பட தமிழகத்தின் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Oct 2023 4:31 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
  2. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  3. குமாரபாளையம்
    பிளஸ் டூ மாணவர்களே! உங்கள் வாய்ப்புக்கு முந்துங்கள்...!
  4. ஈரோடு
    விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது
  5. வணிகம்
    Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
  6. திண்டுக்கல்
    நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  7. தமிழ்நாடு
    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
  8. சினிமா
    Thalapathy 68 Songs மொத்தம் எத்தனை தெரியுமா?
  9. ஆலங்குடி
    குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.13 லட்சம் நிவாரண...