அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
X

எடப்பாடி பழனிச்சாமி

இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. அதிமுக பொதுக்குழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்கமுடியாது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு இருந்தாலும், இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார். ஒரு கட்சியின் உட்கட்சித் தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்சிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் நடத்தி ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். என தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நாளை அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil