வேலூர், திருப்பத்தூரில் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

வேலூர், திருப்பத்தூரில் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
X
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. எனினும் இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இன்று அதிகாலை 4.17 மணியளவில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவில் 3.6 பதிவானதாகவும், பூமிக்கடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில், இது ஏற்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாணியம்பாடி பகுதியில் உள்ள பழைய வாணியம்பாடி, சென்னாம்பேட்டை, பெரியபேட்டை உள்ளிட்ட பகுதி மக்கள், தங்கள் பகுதியில் நில அதிர்வை உணர்ந்ததாக கூறினர். இதனால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக, இதுவரை தகவல் இல்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!