இ-சேவை, ஆதார் மையங்கள் மாவட்டஆட்சியர் அனுமதியுடன் இயங்கலாம்

தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள இ-சேவை, ஆதார் மையங்கள் மாவட்டஆட்சியர் அனுமதியுடன் இயங்கலாம் என அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள இ-சேவை, ஆதார் மையங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் கலெக்டரின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது .

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாஸ்கர பாண்டியன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு இ -சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது . அனைத்து இ - சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களை 2 கவுன்டர்கள் உள்ள மையங்களில் ஒரு கவுன்டர் முழு வேலை நேரமும் , ஒரு கவுன்டர் உள்ள மையங்களை மதிய உணவு இடைவேளை செயல் பட வேண்டும் . ஜூன் 7 ம் தேதி முதல் கலெக்டரின் ஒப்புதல் பெற்று செயலகத்தில் கொண்டு வரவேண்டும் . மையங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவரும்போது கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் . அதாவது , பணிபுரியும் இடத்தில் அனைத்து தரவு உள்ளீட்டாளர்களும் கட்டாயம் மாஸ்க் மற்றும் பேஸ் ஷீல்ட் உபயோகித்து பணிபுரிய வேண்டும் .

கிருமி நாசினியை உபயோகித்து கையை 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . பொருட்களை துணியால் கிருமிநாசினியை கொண்டு சுத்தமாக பராமரிக்க வேண்டும் . கையுறை அணிந்து ஆவணங்களை கையாள வேண்டும் . பணிபுரியும் இடத்தில் சமூக இடை வெளியை 3 அடி அல்லது ஒரு மீட்டர் கடைபிடித்து அமர வேண்டும் .

இ -சேவை மையம் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை 3 அடி அல்லது 1 மீட் டர் கடை பிடித்து சேவைகளை பெற அறிவுறுத்த வேண்டும் . பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் . கிருமி நாசினியை தேவைப்படும் இடங்களில் வைத்து அதனை உபயோகப்படுத்த அறிவுறுத்த வேண்டும் . உணவு இடைவேளைகளில் சமூக இடை வெளியை கடைப்பிடித்து உணவு அருந்த வேண்டும் . அனைத்து மையங்களும் கிருமிநாசினி கொண்டு முழு மையாக சுத்தம் செய்து, முழுமையான கிருமினி நாசினி செய்யப்பட்ட மையங்களாக பராமரிக்கப்பட வேண்டும் . இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!