தமிழக அரசின் இ-பதிவு இணையம் செயல்படத்தொடங்கியது

தமிழக அரசின் இ-பதிவு இணையம் செயல்படத்தொடங்கியது
X
இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்பட துவங்கிய நிலையில், சுய தொழில் செய்பவர்களுக்கான இ-பதிவு பிரிவு நீக்கம்.

தமிழக அரசின் இ-பதிவு இணையம் செயல்படத்தொடங்கியது.

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் சுமார் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய முயன்றதால் இன்று காலைமுதல் இ – பதிவு இணையதளம் முடங்கி இருந்தது. தற்போது இ – பதிவு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பரவல் கடந்த மே மாதத்தில் உச்சத்தை அடைந்தது. தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போது மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு மட்டுமே இ – பாஸ் முறையை அரசு அறிவித்தது. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இ – பதிவு முறையே போதுமானதாக அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் இந்த அறிவிப்பை தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர். அதிக அளவில் வெளி இடங்களில் சுற்ற ஆரம்பித்தனர். இதனால் நோய் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அரசு மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை அறிவித்தது. இ – பதிவிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் பல லட்சக்கணக்கான சுய தொழில் செய்பவர்கள் இ – பதிவு தளத்தை அணுகினர்.

இதனால் இ – பதிவு இணையத்தளம் இன்று காலை முதல் முடங்கியுள்ளது. இணையத்தளம் இன்று மாலைக்குள் சரி செய்யப்பட்டு மீண்டும் சேவை தொடங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார். இந்நிலையில், காலை முதல் முடங்கி இருந்த இ – பதிவு இணையதளம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய முயன்றதால் தளம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்ஸ்டாநியூஸ், தமிழ்நாடு, தகவல், Instanews, Tamilnadu, information, E-Registration, Internet,server,down, Permission, register, electrician, plumber, commuter repair, motor vehicle repairer, carpenter, housekeeper, etc.

E-Registration Internet is down

Tags

Next Story
லேப்டாப்ல சார்ஜ் நிக்கலையா !! சார்ஜ் போட்டுட்டே யூஸ் பண்றீங்களா? அப்ப இத கண்டிப்பா படிங்க..! | Reasons for laptop battery draining fast