ஒமிக்ரான் பரவல்: உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு புது கட்டுப்பாடுகள்

ஒமிக்ரான் பரவல்: உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு புது கட்டுப்பாடுகள்
X

கோப்பு படம் 

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இ பதிவு முறையும் கட்டாயமாகி உள்ளது.

இது தொடர்பாக, இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது. இதில், மாநிலம் வாரியாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

தமிழகம் வரும் உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் இனி, தொ்மல் ஸ்கேனா் பரிசோதனை கட்டாயமாகும். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணி கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ், அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லா சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும்.

இதேபோல், இராஜஸ்தான், டெல்லி போன்ற பிற மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து, சென்னை அல்லது தமிழகத்த்ற்கு வரும் விமான பயணிகள் இ-பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று இல்லா சான்றிதழ் வைத்திருப்பது அவசியமாகும்.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளி நாட்டுப் பயணிகள், மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதேபோல ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை இந்திய விமான நிலைய ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!