தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X

தங்கமணி எம்.எல்.ஏ

நாமக்கல்லில் 10 இடங்கள் உட்பட, தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்பு நடத்திய சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மீண்டும் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஒரு இடத்தில், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனையை தொடங்கியுள்ளனர். சேலத்தில், தங்கமணியின் நண்பர் குழந்தைவேலு என்பவரின் மகன் மணிகண்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 15,ம் தேதி குமாரபாளையம் எம்.எல்.ஏ தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பள்ளிபாளையம் அருகே கோவிந்தபாளையத்தில் உள்ள வீடு உள்பட பல இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.2.16, கோடி ரொக்கம், 1.13, கிலோ தங்கம், ஆவணங்கள், கிரிப்டோ கரன்சியில் முதலீடு , சொத்து தொடர்புடைய ஆவணங்கள் கிடைத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து தங்கமணி மறுப்பு தெரிவித்திருந்தார். அதேபோல், பழிவாங்கும் நோக்கில் சோதனை நடைபெற்றதாக, அதிமுக தலைமை கண்டனமும் தெரிவித்திருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!