துபாய் பயணம் 2 முறை ரத்து: அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி

துபாய் பயணம் 2 முறை ரத்து: அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி
X
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், இன்று காலை துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருடைய விசாவின் பிரச்சனை இருந்ததாக பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து விசாவில் உள்ள பிரச்சனை சரியான நிலையில், மாலை 5.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் துபாய் செல்வதற்காக மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

அவரை ஏா் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் வரவேற்று விமானநிலையத்திற்குள் அழைத்து சென்றனா். அவருக்கு போா்டிங் பாஸ், பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்குள் ஏறியும் அமா்ந்துவிட்டாா்.

ஆனால் விமானம் புறப்படுவதற்கு தயாராகும்போது, தன்னுடைய பயணத்தை ரத்து செய்வதாக ஏா்இந்தியா அதிகாரிகளை அழைத்து துரைமுருகன் தெரிவித்தாா். அதிகாரிகளும் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய பயணத்தை ரத்து செய்தனா். பின்னர் அமைச்சா் விமானத்திலிருந்து அவருடைய காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றாா்.

அமைச்சரின் பயண ரத்தால் ஏா்இந்தியா விமானம் 10 நிமிடங்கள் தாமதமாக துபாய்க்கு புறப்பட்டு சென்றது. விமான நிலையம் வந்துவிட்டு பயணம் செய்யாமல் 2 முறை வீட்டிற்க திரும்பிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வீட்டிற்கு சென்ற அமைச்சர் துரைமுருகனும் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் திமுகவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!