டிரைவர் இல்லாத எலெக்ட்ரிக் கார்: சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை

பைல் படம்.
திறன்மிகுந்த எலெக்ட்ரிக் வாகனங்களையும் டிரைவர் இல்லாத வாகனங்களையும் உருவாக்குவதில் மாணவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஐஐடியில் பயிலும் அபியான் என்ற மாணவர்கள் குழு "போல்ட்" என்ற எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கியுள்ளனர். 2025-ம் ஆண்டுக்குள் ஐஐடி வளாகத்தில் இயங்கும் பேருந்துகளை தவிர்த்துவிட்டு இந்த வாகனத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அபியான் குழுவில் இடம்பெற்றுள்ள மாணவர் முக்தா மேதா கூறுகையில், “கம்ப்யூட்டர் யூனிட்தான் இந்த வாகனத்தின் இதயம். இந்த கம்ப்யூட்டர் யூனிட் இல்லையென்றால் இந்த வாகனம் கோல்ப் கிரவுண்டில் பயன்படுத்தப்படும் வாகனம் போன்றுதான் இருக்கும். ஆனால் கம்ப்யூட்டர் யூனிட் இருப்பதால் இந்த வாகனம் வேகத்தடை, சரியான லேன் ஆகியவற்றை எளிதாக கேமரா மூலம் கண்டறிந்து விடும். பிரேக் மற்றும் ஸ்டீயரிங்குக்கு எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அனன்யா தன்வந்திரி கூறுகையில், இந்த ‘போல்ட்’ வாகனத்தில் எமர்ஜென்ஸி பட்டன் இருக்கிறது. இதன்மூலம் உடனடியாக வாகனத்தை நிறுத்த முடியும். 94 சதவீத விபத்துகள் மனித தவறுகளால் நடைபெறுகிறது. இதை தவிர்க்கவே இந்த வாகனத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu