திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 89-வது பிறந்தநாள்: முதலமைச்சர் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.12.2021) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கி.வீரமணியின் துணைவியார் வீ.மோகனாம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 89-ஆம் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி. முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி. 11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக் கொடியை 89-ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க தொண்டறம் தொடர்ந்திடுக என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu