திருப்பூர் வழியாக இயக்கப்படும் இந்த ரயிலை இனி மிஸ் பண்ணாதீங்க!

Tirupur News,Tirupur News Today- கோவை ஜன் சதாப்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து தெரியாததால், பலரும் அந்த ரயிலில் பயணிப்பது இல்லை. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாட்டில் இயக்கப்படும் சகல வசதிகள் கொண்ட ரயில்களில் இதுவும் ஒன்று. ஆனால் பொதுமக்கள் இன்னும் இந்த ரயிலைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். கோவையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்கிறது.
பொதுவாக கோவையில் இருந்து சிதம்பரம் ,சீர்காழி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு செல்ல மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிலும் மிக நீண்ட தூரம் செல்வதால் கடுமையான உடல் சோர்வு ஏற்படும். கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 500க்கும் மேல் வரை உள்ளது. வழியில் அடிக்கடி சாலையோர கொள்ளை கூடாரங்கள் என்ற வடிவில் உணவகங்களில் இந்த பஸ்கள் நின்று செல்லும். சிங்காநல்லூர், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், குளித்தலை, திருச்சி, பாபநாசம், தஞ்சாவூர், கும்பகோணம் என்று பல இடங்களில் இந்த பஸ்கள் நின்று செல்லும். ஆனால் சாமானிய மக்கள் இந்த ரயிலைப் பற்றி அறியாத காரணத்தால், இன்னும் பஸ்சில் தான் சென்று கொண்டிருக்கின்றனர்.
மக்களுக்காக பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், மொத்தம் 16 பெட்டிகளை கொண்டது. ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 100 பேர் பயணிக்கும் வகையில் இடவசதி, இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆறு மணி நேரத்தில் மயிலாடுதுறை சென்று அடைந்து விடும். கோவையில் இருந்து புறப்படும் அதிவேக ரயில்களில் இதுதான் முதன்மையானது.
திருச்சிக்கு பணி நிமித்தமாக செல்வோர் பலரும், இந்த ரயிலைதான் அதிகம் பயன்படுத்துகின்றனர் காரணம், கோவையில் இருந்து நான்கு மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடும். சொகுசான இருக்கைகள். கழிப்பறை வசதி, மின் விசிறிகள் மற்றும் தென்றல் காற்று மூலம் குளு குளு பயணத்தை அனுபவிக்கலாம். மேலும் நியாயமான விலையில் தண்ணீர் பாட்டில் இருந்து உணவு பொருட்கள் வரை அனைத்தும் ரயில்வே மூலம் உள்ளேயே கிடைக்கிறது. இந்த ரயிலில் கேட்டரிங் சர்வீஸ் உள்ளது.
(கோப்பு படம்)
இவ்வளவு வசதிகளும் இருந்தாலும் இந்த ரயிலில் கட்டணம் 170 ரூபாய் மட்டும்தான். முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதால் மிகவும் தூய்மையாக இருக்கும். இந்த ரயிலில் பயணிக்க முன்கூட்டியே நாம் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். கடைசி நேரத்தில் பயணிக்கக்கூடியவர்களுக்கும் ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. கோவை, இருகூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்கிறது ஆனாலும் பஸ்சை விட இரண்டு மடங்கு நேரம் முன்கூட்டியே சென்று சேர்ந்து விடுகிறது.
கோவையில், காலையில் புறப்பட்டு, மதியம் மயிலாடுதுறை சென்று அடைந்த பிறகு மீண்டும் ஒரு மணி நேர இடைவெளியில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணி அளவில் கோவைக்கு வந்து சேர்கிறது. மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் மதியம் 2 மணி வரை இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கிறது. ஆனால் தினமும் கிட்டத்தட்ட 800 இருக்கைகள் காலியாக இந்த ரயில் செல்வதாக கூறப்படுகிறது. பொங்கல் தீபாவளி மற்றும் விடுமுறை காலங்களில் ஒரு இடம் கூட இல்லாமல் முழுமையாக நிரம்பி வழியும் இந்த ரயில் நடுத்தர மக்களுக்காக பிரத்தியேகமாக இயக்கப்படும் ரயில்.
ஆனால் முன்பதிவு நடைமுறை தெரியாத காரணத்தால் பலரும் இதை பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த ரயிலை மக்கள் அதிகளவில் பயன்படுத்தாமல் விட்டால், எதிர்காலத்தில் இந்த ரயிலை ரத்து செய்துவிட்டு, வட மாநிலங்களுக்கு திருப்பி விடவும் அதிக வாய்ப்பு உள்ளது
எனவே, தமிழக மக்களுக்காக இயக்கப்படும் இந்த ரயிலை அனைவரும் பயன்படுத்தினால், இந்த ரயில் தொடர்ந்து இதே வழித்தடங்களில் இயக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவர்.
வண்டி எண் - 12083/ 12084
கோவை - மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி சூப்பர் பாஸ்ட் ரயில்
(புறப்படும் நேரம் - திரும்ப வரும் நேரம்)
கோவை - 07:15 (காலை) 21:15
இருகூர் - 07:29. 20:29
திருப்பூர் - 07:53. 20:03
ஈரோடு - 08:38. 17:18
கரூர் - 09:28. 18:23
திருச்சி - 10:50. 16:45
தஞ்சாவூர் - 11:48. 15:53
பாபநாசம் - 12:11. 15:29
கும்பகோணம் - 12:23. 15:16
மயிலாடுதுறை - 13:50. 14:50- என்ற நேர அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. இனிமேல், இந்த ரயிலை நீங்கள் மிஸ் பண்ணாதீங்க...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu