உங்க வாக்குச்சாவடி தெரியலையா? முதலில் இதை செய்யுங்க...
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஆனால் வாக்காளர்கள் சிலர், வெளியூரிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்கும் நிலையும் உள்ளது. தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற திடீரென வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் வாக்குச்சாவடி எங்குள்ளது என குழப்பத்திலும் இருந்து வருகின்றனர்.
இந்த குழப்பத்திலிருந்து மீள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் வழங்கியும் வருகிறது. ஆனாலும் சிலர் பூத் சிலிப் இல்லாதவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த குழப்பத்திலிருந்து மீள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வாக்காளர்களுக்கென வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find_your_polling_station.php இந்த லிங்க்கை பயன்படுத்தி தங்களது வாக்குச்சாவடிகளை தெரிந்துகொள்ளலாம்.
இந்த இணையதள முகவரியில் வரும் பக்கத்தில் முதலில் அடையாள அட்டை எண்ணையும், சரிபார்ப்பு குறீயீடை உள்ளீடு செய்தால் உங்கள் வாக்குச்சாவடி விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இதேபோல் இந்திய தேர்தல் ஆணைய இணையதளமான https://electoralsearch.in/ என்ற முகவரியிலும் சென்று தெரிந்துகொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu