சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயர்வு
X
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி

கடந்த 7ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது .

தற்போது கேஸ் சிலிண்டர் விலை இன்னும் உயர்ந்துள்ளது . அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகிறது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலைரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.

ஒரே மாதத்தில் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்