ஆயிரத்தை தாண்டிய சமையல் எரிவாயு சிலிண்டர்

ஆயிரத்தை தாண்டிய சமையல் எரிவாயு சிலிண்டர்
X
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால், சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியது

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை, மார்ச் மாதத்தில் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 965 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் இந்த நேரத்தில் சிலிண்டர் விலையும் உயர்ந்ததால், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு