வெளிநாடு செல்ல விமானம் தாமதமானதால், சென்னை விமான நிலையத்தில் படுத்துறங்கும் நாய்கள்

வெளிநாடு செல்ல விமானம் தாமதமானதால், சென்னை விமான நிலையத்தில் படுத்துறங்கும் நாய்கள்
X

சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருக்கையில் உறங்கும் நாய்கள் 

சென்னை சர்வதேச விமான நிலைய பயணிகள் காத்திருப்பு பகுதியில் நாய்கள் உறங்குவது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு பகுதியில், உள்ள இருக்கையில் இரண்டு நாய்கள் படுத்துறங்கும் படத்தை ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார், இது குறித்து ட்விட்டரில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தை விலங்குகளுக்கு ஏற்ற விமான நிலையமாக மாற்றியதற்கு நன்றி என ஒருவர் ட்வீட் செய்துள்ளார். பேருந்து நிலையம் கூட கொஞ்சம் நன்றாக இருக்கும் என ஒருவர் கிண்டலடித்துளார்

பல நாட்டினரும் வந்துசெல்லும் ஒரு சர்வதேச விமான நிலையத்தில், இதுபோன்ற காட்சிகள், நமது நாட்டிற்கு அவப்பெயரை தேடித்தரும் என்பதை விமான நிலைய அதிகாரிகள் உணரவில்லையா?

பல சிறிய மாநிலங்களில் சென்னை விமான நிலையத்தை விட சிறந்த விமான நிலையங்கள் உள்ளது, இது போன்ற பராமரிப்பின்மையால், தமிழகத்திற்கு அவப்பெயரே மிஞ்சும் என்பது அதிகாரிகள் உணர்வதெப்போது?

Tags

Next Story
ai healthcare technology