இன்றைய சிந்தனை (12.04.2022) "இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள்...!"

இன்றைய சிந்தனை (12.04.2022) "இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள்...!"
யாரும் யாருக்காகவும் வாழவேண்டிய அவசியம் இல்லை. வாழவுமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.இதை ஒப்புக்கொள்ளத்தான் மனம் தயக்கம் காட்டுகிறதே தவிர வேறு ஓன்றும் இல்லை...
நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்பதுதான் சரியாகும். இதற்கிடையில் இருப்பதுதான் பந்தம், பாசம், உறவுகள் எல்லாம். தாய், தந்தை, மனைவி ,மகன், மகள் உறவுகள் எல்லாமே...
ஏதோ ஒன்றை மற்றவரிடம் எதிர்ப்பார்த்துதான் வாழ்க்கையும் ஓடுகின்றது.இந்த எதிர்ப்பார்ப்பு இல்லை என்றால் உறவுகள் கூட நொருங்கி விடுகின்றது...
யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை,அதேபோல யருக்காகவும் எந்த நிலையும் நின்று விடுவதுமில்லை...'புகழ் பெற்ற துறவி அவர். அவருக்கு ஏராளமான மாணவர்கள்.ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்...பரஸ்பர விசாரிப்பு களுக்குப் பிறகு, குருவே, ;;எனக்கு ஒரு குழப்பம்,' என்று ஆரம்பித்தார்
மாணவர்...என்ன?''என்றார் அந்த துறவி...நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாக பின் பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன்.. அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக் கூர்மையையும் தருகின்றன.அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!...'மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?என்றார் துறவி...''நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா? என்ற சந்தேகம் இருக்கிறது.அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது...
சில நாள்களில் நானும் ஒன்று இரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்து விடுகிறது!".குருநாதர் சிரித்தார்... ஆக…நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?
''ஆமாம் குருவே. அது தவறு இல்லையா?''இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்று விடும்!'' அய்யோ..ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்று விட்டால்..? ''ரொம்ப நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்து விடும் இல்லையா?!
உன் எண்ணம் என்ன சொல்கிறதோ, அதன்படி நட.மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்கு உன் இயல்பை மாற்றிக் கொள்ளாதே! என்றார்....
ஆம் நண்பர்களே...!
உங்கள் மனசாட்சி சொல்வதை கேளுங்கள். அது கூறும் முடிவு எப்பொழுதும் தவறாக இருக்காது...நீங்கள் நினைத்த மாதிரி எந்த செயலும் நடக்க வில்லை என்றால் உங்கள் மனசாட்சி கூறும் வழியில் செல்லுங்கள்...
உங்கள் மனசாட்சி எப்பொழுதும் உங்களிடம் பொய் கூறாது...அது கூறும் பதிலில் எப்பொழுதும் நேர்மையும், உண்மையும் இருக்கும்...
- உடுமலை சு.தண்டபாணி✒️
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu