நீண்ட ஆயுளுடன் வாழ ஆசையா? செலரி கீரை சாப்பிட்டு பாருங்களேன்...

நீண்ட ஆயுளுடன் வாழ ஆசையா? செலரி கீரை சாப்பிட்டு பாருங்களேன்...
X
celery in tamilநீண்ட ஆயுளுடன் வாழ ஆசை என்றால் செலரி கீரையை எப்படிசாப்பிடுவது என பாருங்கள்.

celery in tamilசெலரி என்ற காய்கறி கொத்துமல்லி தழை போன்று தோற்றத்தில் இருக்கும் கீரை வகையாகும். இது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற கிழக்கு ஆசியாவில் வளர்பவை. தற்போது இந்தியாவிலும் பரவலாக விளையச் செய்கிறோம். இதில் காணப்படும் சத்துக்கள் அளவிட முடியாது. அத்தனை நன்மைகளை இந்த கீரையை எல்லோரும் இப்போது உண்ண ஆரம்பித்து விட்டார்கள். இந்த செலரியில் சாலட் செய்வது பிரசித்து பெற்றது. வேகவைக்காமல் சாப்பிட்டால் அதன் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.


கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும்

celery in tamilநாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளை விட 7 மடங்கு கொலஸ்ட்ராலை குறைக்கக் கூடியது. விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி, பொட்டாசியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், சோடியம், அமினோ அமிலங்கள் என ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.

இதிலுள்ள பியூட்டைல் தாலைட் என்ற சத்து கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. பைல் அமிலத்தை சுரக்கத் தூண்டுகிறது. இதனால் கொழுப்புகள் வேகமாக ஜீரணிக்கப்படுகிறது.


டென்ஷன் குறையும்

celery in tamilநாம் தொடர்ந்து 7 நாட்கள் செலரியை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள தாலைட் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் தேவையில்லாமல் டென்ஷன் படுபவர்கள் சாப்பிட்டால் நல்ல மாற்றங்கள் நாம் தொடர்ந்து 7 நாட்கள் செலரியை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள தாலைட் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் தேவையில்லாமல் டென்ஷன் படுபவர்கள் சாப்பிட்டால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

தூக்கத்திற்கு அரு மருந்து

celery in tamilஇன்சோம்னியா என்ற நீண்ட நாட்களாக தூங்காமல் அவதிப்படுபவர்களுக்கு செலரி ஒரு அரு மருந்து. இது நரம்புகளில் உண்டாகும் இறுக்கத்தை தளர்க்கிறது. மெலடோனின் ஹார்மோனை அதிகப்படுத்தி தூங்க வழிவகுக்கிறது.

அதிக இனிப்புகளை சாப்பிடும்போல் தூண்டும் மூளையின் உணர்வுகளை கட்டுப்படுத்தி, உடல் இளைக்க உதவுகிறது. இதனை ஜூஸாக செய்து குடித்தால் நமக்கு ஒரு மாதத்தில் நல்ல பலன் அளிக்கும்.

celery in tamilசிறுநீரகத்தில் மற்றும் பித்தப்பையில் உண்டாகும் கற்களை கரைத்து வெளியேற்றுகிறது. அதோடு, சிறு நீரகத்தில் இவை உண்டாகாமலும் தடுக்கிறது.


நீண்ட ஆயுளுடன் வாழ...

celery in tamilஇதிலுள்ள அதிக நார்சத்து உணவுக் குழாய் மற்றும் சிறு குடலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். மலச்சிக்கலை குணப்படுத்தும். உடல் நோய்க்கு மருந்துகளை நீங்கள் உட்கொண்டால் அதனால் உருவாகும் நச்சுக்களை வெளியேற்றும்.

celery in tamilஎனவே நாமும் நமது உணவில் செலரி கீரையை பயன்படுத்தி பார்ப்போமா? செலரி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்றும் ஆய்வில் தெரிய வந்து உள்ளது. எனவே குறைந்த விலையில் கிடைக்க கூடிய இந்த செலரி கீரைகளை சாப்பிட்டு பார்க்கலாமா?

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க