தீபாவளி தினத்தன்று பட்டாசு ஏன் வெடிக்கவேண்டும் என தெரியுமா?

தீபாவளி தினத்தன்று பட்டாசு ஏன் வெடிக்கவேண்டும் என தெரியுமா?
X
தீபாவளி தினத்தன்று பட்டாசு ஏன் வெடிக்கவேண்டும் என தெரியுமா? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Diwali festival, burst crackers reasonவிடிந்தால் தீபாவளி ...உலகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். இனிப்பு, புத்தாடை எல்லாம் அதற்கு அடுத்த நிலையில் தான். அந்த வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசுகளே முக்கிய இடத்தை பிடிக்கிறது.


பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

Diwali festival, burst crackers reasonஆனால் இப்போது பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு உள்ளது. நாளை தீபாவளி யன்று காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களின் குழந்தைகள் அது பெற்றோர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்று இருந்த அதே உலகம் தான் இன்றும் இருக்கிறது. அன்று இருந்த அதே பண்டிகை தான் இப்பவும் கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அன்று பட்டாசு வெடிப்பதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஆனால் இப்போது பட்டாசு வெடித்தால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என என்னென்னவெல்லாமோ காரணத்தை கூறி பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சிக்கு தடை விதித்து விடுகிறார்கள். ஓசோன் படலத்தில் அன்று உலாத ஓட்டை இப்போது மட்டும் எப்படி விழப்போகிறது என தெரியவில்லை.


பட்டாசு ஏன் வெடிக்கவேண்டும்?

Diwali festival, burst crackers reasonதீபாவளி தினத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் மகிழ்விப்பது பட்டாசு மட்டுமே. வானில் வண்ண கோலம் போடும் பட்டாசுகளை பார்க்கும்போது மகிழ்ச்சி அடையாதவர் யாரும் இருக்க முடியாது. இப்படி கொண்டாட்ட மனநிலையை உருவாக்குவது என்பதை தாண்டி பட்டாசு வெடிப்பதன் பின்னால் சாஸ்திர ரீதியான காரணங்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை இந்த கட்டுரையை தொடர்ந்து படித்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

நரக சதுர்த்தசி

Diwali festival, burst crackers reasonதீபாவளிக்கு நரக சதுர்த்தசி என்றும் ஒரு பெயர் உண்டு. நரகாசுரனை கிருஷ்ணபரமாத்மா அழித்ததை தீபாவளி ஆக கொண்டாடுகிறோம் நாம். இந்த கொண்டாட்டம் அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது. இப்படித்தான் நம் முன்னோர்கள் நமக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இதில் பகுத்தறிவுவாதிகள் என்ற பெயரில் நாத்திகவாதிகள் புகுந்து இது தமிழன் பண்டிகை அல்ல. ஆரியன் பண்டிகை. ராஜாக்களின் காலத்தில் தீபாவளி கொண்டாடினார்களா? என்றெல்லாம் பேசி புது பிரச்சனையை கிளப்பி தீபாவளிக்கு தடை விதிக்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. இந்துக்களின் பண்டிகை மீது இவ்வளவு ஆரூடம் கூறும் சில அரசியல் கட்சி தலைவர்கள் மற்ற மதத்தின் பண்டிகைகளை பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை.

முன்னோர்களுக்கு வழிகாட்டும் ஒளி

Diwali festival, burst crackers reasonநரக சதுர்த்தசிக்கு வேறு சில விளக்கங்களும் உள்ளன. எமன் ஆளும் நரகத்திற்கு மனிதர்கள் செல்வதை தடுக்கவும் அகால மரணம் ஏற்படுவதை தவிர்ப்பதிலும் தீபாவளி பண்டிகை உடனான தொடர்பை பத்ம புராணம் விவரிக்கிறது. இதன் மூலம் தீபாவளி என்பது எமன் மற்றும் நம்மைப் பிரிந்த முன்னோர்களுடன் தொடர்புடையது என்பது தெளிவாகிறது. பொதுவாக மகாளய பட்சத்தின் போது நமது முன்னோர்கள் பூமிக்கு வருகை தந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் மூலம் உணவை பெறுகிறார்கள் என்பது நம்பிக்கை. அப்படி மகாளய அமாவாசையின் போது பூமிக்கு வரும் நம் முன்னோர்கள் அவரவர் லோகங்களுக்கு திரும்பி செல்லும் போது அவர்களுக்கான வழியை ஒளிரச் செய்யும் நேரமே தீபாவளி.



உல்கா தானம்

Diwali festival, burst crackers reasonநம்மூரில் சொக்கப்பனை என்று உயரமான நெருப்பை மூட்டி வலம் வருவதும் வானில் திகைப்பூட்டும் தீ வேலைப்பாடுகளை காட்சிப்படுத்துவதும் இந்த நோக்கத்திற்காகவே. நம் முன்னோர்கள் அவர்களின் உலகை சென்றடைவதையும் பாதையை ஒளியூட்டுவதற்காக என்று ஸ்கந்தபுராணம் விரிவாக கூறுகிறது. தீபாவளியன்று மாலை நேரத்தில் கைகளில் மத்தாப்பு ஏந்தியபடி என்னால் இயற்றப்பட்ட இந்த ஜோதி என்னுடைய மூதாதையர்கள் நல்ல கதியடைய வழி காட்டட்டும் என்று வேண்டிக் கொள்வதே உல்கா தானம் என்று கூறப்படுகிறது.

இது தான் காரணம்

Diwali festival, burst crackers reasonதீபாவளியன்று எப்படி கங்கா ஸ்நாணம், தீபம் ஏற்றுதல், ஆலய தரிசனம், வீட்டில் உள்ள பெரியவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுதல் ஒரு அங்கமோ அதுபோல உல்காதானம் எனப்படும் மத்தாப்பு கொளுத்துவதும் வானில் ஒளிபரப்பும் பட்டாசுகளை வெடிப்பதும் ஆகும். இதுதான் தீபாவளின்று பட்டாசு வெடிப்பதற்கான காரணம் என ஐதீகமாக நம்பப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!