திருச்சி- கரூர்-திருச்சி பாசஞ்சர் ரெயில் எந்தெந்த நாட்கள் ரத்து என தெரியுமா?
திருச்சி -கரூர் ரயில் மார்க்கத்தில் பொறியியல் பணிகள் காரணமாக 3 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இருப்புப் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் ரயில் எண்06882 கரூர்- திருச்சி மாலை 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்படுகின்ற இந்த ரயில் பிப்ரவரி 14, 21 மற்றும் 28ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இதுபோல் ரயில் எண் 06123 திருச்சி -கரூர் மாலை 6 .20 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படுகின்ற இந்த ரயில் பிப்ரவரி 14, 21 மற்றும் 28ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
பாலக்காடு டவுன் -திருச்சி ரயில் எண் 16844 பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வரும் இந்த ரயில் பிப்ரவரி 14 ,21 , 28ஆம் தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது.
இதுபோல், திருச்சி -பாலக்காடு டவுன் எண் 16843 ரயில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிப்ரவரி 14 ,21 மற்றும் 28-ம் தேதியில் திருச்சியில் இருந்து கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஆனது கரூரில் இருந்து மதியம் 2.25மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுன் சென்றடையும்.
திருச்சி- ஈரோடு ரயில் 06809 திருச்சியில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது பிப்ரவரி 14, 21 மற்றும் 28ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது. கரூரில் இருந்து ஈரோட்டிற்கு மாலை 6:15 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu