வாஸ்து படி வீட்டில் பூஜை அறை எந்த இடத்தில் அமைய வேண்டும் என தெரியுமா?

Pooja Room Vastu in Tamil
X

Pooja Room Vastu in Tamil

Pooja Room Vastu in Tamil-வாஸ்து படி வீட்டில் பூஜை அறை எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை அறிய கீழே தொடர்ந்து படியுங்கள்.

Pooja Room Vastu in Tamil-ஒரு வீடு என எடுத்துக்கொண்டால் வாஸ்துபடி எந்தெந்த அறைகள் எந்த இடத்தில் அமைந்தால் சிறப்பாக இருக்கும், எந்தெந்த பொருட்களை எப்படி வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வாஸ்து படி இவை சரிவர அமைக்கப்படவில்லை என்றால் நாம் என்ன தான் பணத்தை தண்ணீராக இறைத்து வீட்டை கடடி இருந்தாலும் நிம்மதி இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் அல்ல துயரமான சம்பவங்களும் நடந்து விட வாய்ப்பு இருப்பதாக வாஸ்து நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

ஆதலால் நிம்மதியாக வாழவேண்டுமானால் வாஸ்துவை பின்பற்றவேண்டும் என்பது தற்போது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கியமானது வாயுமூலை, ஈசானியமூலை, அக்னிமூலை, குபேர மூலை. இந்த ஒவ்வொரு மூலையிலும் என்னென்ன அமைக்கப்படவேண்டுமோ அவை அமைக்கப்படவேண்டும். குறிப்பாக சமையல் அறை அக்னி மூலையில் தான் அமைக்கப்படவேண்டும். அக்னி மூலையில் படுக்கையறை அமைந்தால் அன்றாடம் எரியும் நெருப்பு போல் பிரச்சினைகளை தான் எதிர்கொள்ளவேண்டியது இருக்கும்.

வீட்டில் அமைய வேண்டிய முக்கியமான அறைகளில் ஒன்று பூஜை அறை.வாஸ்துபடி பூஜை அறையானது வீட்டின் மத்திய ஸ்தானத்தில் அமைக்கப்படவேண்டும் என வாஸ்து படி கணிக்கப்பட்டு உள்ளது. மத்திய ஸ்தானம் என்றால் வீட்டின் மத்திய பகுதியில் என்று அர்த்தம் அல்ல. வாயுமூலைக்கு அடுத்த பகுதியில் கூட வீட்டின் மத்திய பகுதியை நோக்கி அமைக்கப்படலாம்.

மேலும் பூஜை அறையானது கட்டாயம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து இருக்கும் வகையில் தான் அமைக்கப்படவேண்டும். மேற்கு பார்த்து நாம் சாமி கும்பிடலாம். பூஜை அறைக்கு கதவு கட்டாயம் வைக்க வேண்டும். அந்த கதவு பூஜை அறையின் நடுப்பகுதியில் தான் அமைக்கப்படவேண்டும். ஒரு ஓரத்தில் அமைய கூடாது. தகவில் துவாரங்கள் இருக்கவேண்டும். கதவில் மணி கட்டலாம். கதவு இல்லை என்றால் திரை போட்டுக்கொள்ளலாம்.

பூறை அறையில் ஒரே ரேக் தான் இருக்கவேண்டும். அந்த ரேக்கில் எண்ணெய் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்துக்கொள்ளலாம். இது தவிர மற்ற பொருட்களை அங்கு வைக்க கூடாது. இதுபோன்ற விதிமுறைகளை பின்பற்றி பூஜை அறை அமைத்தால் வீடு சிறக்கும் என வாஸ்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story