தேங்காயில் இயற்கை சத்துக்கள் என்னென்ன இருக்கிறது என தெரியுமா?

தேங்காயில் இயற்கை சத்துக்கள் என்னென்ன இருக்கிறது என தெரியுமா?
X
தேங்காயில் இயற்கை சத்துக்கள் என்னென்ன இருக்கிறது என தெரியுமா? என்பதை அறிய கீழே படியுங்கள்.

திருச்சி ஸ்ரீ ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலகத் தேங்காய் தினத்தை முன்னிட்டு தேங்காய் நல்லதா கெட்டதா என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.


இதில் தேங்காய் குறித்து இயற்கை மருத்துவர் சுகுமார் பேசுகையில் தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனைத் தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கு + "காய்" = தேங்காய் (நன்னூல்.187) என அழைக்கப்படுகின்றது.

இயற்கை தந்த வரப்பிரசாதங்களில் ஒன்று தான் தேங்காய். கோவில் பூஜை பொருள்கள் தொடங்கி வீட்டில் சமையலறையிலும் தேங்காயின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. சாம்பார், அவியல், பொரியல், தேங்காய் பால் சாதம் போன்ற பலவற்றிற்கு சுவைக்காகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சுவையை விட உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றது.

தேங்காயில் புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்களும் வைட்டமின் சி முதல் உடல் இயக்கத்துக்கு ஆரோக்கியமான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.பச்சை தேங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்க உதவியாக உள்ளது. எனவே இதனை தினமும் சாப்பிடும் போது எவ்வித மாத்திரை மருந்துகள் எடுக்காமல் இயற்கையான முறையில் மலச்சிக்கலை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

பொதுவாக தேங்காய் சாப்பிடும் போது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவியாக உள்ளது. ஒரு வேளை இயற்கையாக தேங்காய் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால், இதய ஆரோக்கியம் மேம்படும்.

தேங்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகளவில் உள்ளன. இது உடலில் கொழுப்பை எரிக்க உதவுகிறது. மேலும் தேங்காய் சாப்பிடும் போது வயிறு நிறைந்ததுப்போல் நாம் உணர்வோம். எனவே தேவையற்ற நொறுக்கு தீனிகள் சாப்பிடும் என்ற எண்ணம் வராது.இளமைத் தோற்றமளிக்க உதவும். எனவே அளவோடு தேங்காயை சாப்பிட்டு வருவது ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil