பட்டாசு கடைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தெரியுமா?

பட்டாசு கடைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தெரியுமா?
X
பட்டாசு கடைகளில் கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு விதிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் ஏராளமான பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பட்டாசு கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. விபத்துகளை தவிர்க்கும் வகையில், பட்டாசு கடையின் கட்டுமானம் செங்கல், கல் அல்லது காங்க்ரீட் கொண்டு கட்டப்பட்டதாகவும் முழுவதும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும்.

கடையானது குறைந்தபட்சம் 9 சதுர மீட்டரும் அதிக பட்சம் 25 சதுர மீட்டருக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும். கடையானது தரைதளத்தில் இருக்க வேண்டும். தனி நுழைவு வாயிலும், தனி, அவசரகால வெளியேறும் வாயிலும் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

கதவு வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். மேல் தளத்தில் குடியிருப்பும் அதனடியில் வெடிபொருள்கடையும் இருத்தல் கூடாது. கடையானது கைபடி சுவர் அருகிலோ அல்லது லிப்ட் (சுமைதூக்கி) அருகிலோ இருத்தல் கூடாது. கடை அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வெளியே கடைக்குரிய மெயின் சுவிட்ச் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வெடிபொருள் விற்பனை செய்யும் இடத்திற்கும் இருப்பு வைத்திற்கும் இடத்திற்கும் இடையே குறைந்த பட்சம் 3 மீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் பாதுகாக்கப்பட்ட தொழில்கள் (மருத்துவமனைகள், பள்ளி கூடங்கள் போன்றவை) நடைபெறும் இடத்திற்கு இடையில் 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். நிரந்தர அனுமதி மற்றும் தற்காலிக அனுமதி பெற்ற பட்டாசு கடைகள் எதிரெதிரே இருக்கக் கூடாது வெடி வெடிக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவிற்குள் வெடி பொருட்கள் கடை இருக்கக்கூடாது.

குறைந்தபட்சம் இரண்டு 10 கிலோ எடையுள்ள தீயணைப்பு கருவிகள் கடை வளாகத்திற்குள் பெருத்தப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 9 லிட்டர் அளவு கொண்ட தீ வாளி குறைந்த பட்சம் 5 எண்ணிக்கை (3 தண்ணீர், 2 மணல்) கடை வளாகத்திற்குள் வைக்க வேண்டும். எளிதில் தீயணைக்கும் வகையிலும், எளிதில் அணுகு சாலையை அடையும் வகையிலும், அணுகு சாலை ஆறு மீட்டர் அளவு அகலம் உள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.

கடை வளாகத்திற்குள் மின் வயர்கள் தேவையில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. ஒரு வளாகத்திற்கும் அடுத்த வளாகத்திற்கும் இடையில் 15 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ள தொடர் விளக்குகள் தொங்கும் விளக்குகள் மற்றும் அதன் கட்டமைப்புகள் தீப்பொறியை ஏற்படுத்தும் அதனால் அதை தவிர்க்க வேண்டும்.

ஏர் கண்டிஷன்ஸ், யுபிஎஸ் பேட்டரிஸ், ஜெனரேட்டர்ஸ், லிட் ஆசிட் பேட்டரிஸ், எண்ணெய் விளக்குகள் ஊதுபத்தி பயன்படுத்த கூடாது. பட்டாசுகளை ஏற்றவும் இறக்கவும் கொண்டு செல்வதில் உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஈடுபடுத்த கூடாது. உரிமம் பெற்ற அளவைவிட பட்டாசின் இருப்பு அதிகமாக இருத்தல் கூடாது. உச்சநீதிமன்றத்தால் தடைய செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்தல் கூடாது (பேரியம் கலந்த கலவை பட்டாசுகள், தொடர் வெடிக்கும் சரவெடிகள்) என அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!