புடவை உருவான வரலாறு தெரியுமா?

பைல் படம்.
பாரம்பரிய ஆடைகளில் புடவைக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. இதில் பட்டு, காட்டன், ஷிபான் என பல ரகங்கள் உள்ளன. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போலவே இதன் வரலாறும், சுவாரசியம்மிக்கது. பண்டைய காலத்தில் உடல் முழுவதும் சுற்ற அணியப்படும் ஓர் ஆடையாகத்தான் புடவை இருந்தது. புடவை அணிவதற்குகென்று எந்தவிதமான சிறப்பு முறையும் ஏற்படுத்தப்படவில்லை.
அதன் பின்பு சங்ககால பெண்கள் தான் இதற்கு அடிப்படையான முறையை முதலில் கண்டறிந்தனர். அந்த காலத்தில் பெண்கள் தொப்புள் தெரியும் படிதான் புடவையை அணிந்தார்கள். பிறகு அவ்வாறு அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னரே தற்போது உடுத்தும் முறை தோன்றியது. அந்த காலத்தில் தைக்கப்படாத ஆடைகள் அணிபவர்கள் சிறந்தவர்கள் எனும் நியதி இருந்தது. அதன் காரணமாகவே விழா, கோவில் திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெண்கள் புடவை அணிய வேண்டும் என்பது கட்டாயமானது.
முகலாயர்களின் வருகைக்கு பிறகே புடவையில் கற்கள், ஜர்தோசி கற்கள் பதிப்பு போன்ற அலங்காரங்கள் புகுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்பு தான் ரவிக்கை, உள்பாவாடை உடுத்தும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இடுப்பை மறைத்தபடி நீண்ட ரவிக்கை அணிந்து அதன்மேல் புடவை உடுத்த ஆரம்பித்தார்கள். இந்த முறைக்கு நிவி ஸ்டைல் என்று பெயர். ஆரம்ப காலத்தில் பட்டுப்புடவைகள் பிரபலமாக இருந்தன. பருத்தி அணிந்தால் மரியாதை குறைவாக கருதி புறக்கணிந்தனர். நாம் வீர மங்கைகளாக கருதும் ஜான்சி ராணி, ருத்ரமா தேவி போன்ற பலரும் பாரம்பரிய உடைகளாக புடவையை அணிந்துதான் போரிட்டனர்.
தென்னிந்தியாவில் புடவைகள் பெண்களின் பிரதான ஆடையாக இருந்தாலும் இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின. ஆரம்பத்தில் புடவை ஒரு நிறத்திலும், ரவிக்கை வேறு நிறத்திலும் அணிந்தனர். காலப்போக்கில் புடவையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் அணியத்தொடங்கி இப்போது பல டிசைன்களில் அணிந்து வருவதை பார்க்கிறோம். புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டிராவில் பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, வங்காளத்தில் பல்சுரி பட்டு என புடவையில் பல ரகங்கள் உண்டு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu