மஹாசிவராத்திரியான இன்று இரவு கண்விழித்து சிவனின் அருளை பெறுவது எப்படி?

மஹாசிவராத்திரியான இன்று இரவு கண்விழித்து சிவனின் அருளை பெறுவது எப்படி?
X
மகா சிவராத்திரி உருவான வரலாறு பற்றி அரிய தகவல்கள் கிடைத்து உள்ளது.

இன்று மஹா சிவராத்திரி. உலகின் பரம்பொருளான சிவனை இன்றிரவு கண்விழித்து வணங்கி வழிபாடு செய்தால் பிறவிப் பேரின்பத்தை அடையலாம் என்கிறது சிவபுராணம்.ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவது உண்டு. ஆனால் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி அன்று கடைப்பிடிக்கப்படுவது மகா சிவராத்திரி ஆகும்.

இன்றைய தினம் மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுவது உண்டு. சிறப்பு வாய்ந்த சில கோவில்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதும் உண்டு. இத்தகைய சிறப்புக்குரிய மகா சிவராத்திரி தோன்றியது எப்படி என்பது பற்றி புராணங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது‌.

அவற்றில் மக்களால் அதிகமாக நம்பப்படுவது திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற ஒரு போட்டி எழுந்தபோது ஈசன் நெருப்பு வடிவமாக ஓங்கி உயர்ந்து தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என்று ஒரு போட்டியை நடத்தினார். திருமால் அடியையும், பிரம்மா முடியையும் தேடிச் சென்றனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவில் அவர்களுக்கு ஈசன் சிவலிங்க மேனியாக காட்சி அளித்த நாளே மகா சிவராத்திரி என்கிறார்கள் ஆன்றோர் பெருமக்கள்.


அத்தகைய சிறப்புக்குரிய மகா சிவராத்திரி நாளில் இன்று இரவு கண் விழித்து சிவனின் திருநாமமான ஓம் நமச்சிவாயா என்ற சொல்லை ஒலித்துக் கொண்டிருந்தால் இறைவனின் அருளை பெறலாம். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு பூஜை செய்து அருகில் உள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று சிவனை தரிசனம் செய்யலாம். மாலையில் சிவாலயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ அபிஷேகங்கள் பூஜைகளையும் கண்டுகளிக்கலாம்.

பால்,, தயிர், நெய், தேன், புஷ்பங்கள் கொண்டு இறைவனை வழிபடலாம். உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை மட்டும் உண்ணலாம். அதேபோல் நாளை காலை 6 மணிக்கு விரதத்தையும் முறைப்படி முடித்தால் இப் பிறவியில் முக்தி பெறுவதோடு அவர்களின் சந்ததியினர் 21 தலைமுறைக்கு பலன் பெறுவார்கள் என்று ஐதீகமாக நம்பப்படுகிறது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?