அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் எவ்வளவு தெரியுமா?
பைல் படம்
தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்த்தி வழங்குதல் குறித்து அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்லூரி /பல் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஈடுகட்ட உதவும் வகையில் கல்வி முன்பணம் என்ற வட்டியில்லா முன்பணம் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது அதில் அரசு ஊழியர்களின் ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது கல்வி முன்பணம் இதில் எது குறைவோ என்ற வரம்பின் அடிப்படையில் பெறலாம் என அரசாணை (156006U) 6T GOOT.821, நிதி(சம்பளங்கள்) துறை, நாள்.13.06.1979-ல் ஆணையிடப்பட்டது
மேற்கண்ட அரசாணை வெளியிடப்பட்டு முப்பதாண்டுகள் கடந்த நிலையில், அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகையானது கீழ்கண்ட நிபந்தனைகளுடன் தற்போது இவ்வரசால் உயர்த்தி ஆணையிடப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-2024 கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும்.
I. தொகுதி C மற்றும் D ஊழியர்களுக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகை அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும்.
II. தொகுதி A மற்றும் B அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படைஊதியத்தில் 50% அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu