எம்.ஜி.ஆர். கட்சியை விட்டுபோனபோதே திமுக கவலைப்படவில்லை: ஆர்.எஸ்.பாரதி அதிரடி
செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி
தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது, கட்சியின் மூத்த தலைவரான திருச்சி சிவாவின் மகன் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் தந்தை இந்திரனின் திருவுருவப்பட திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டதற்கு,
எம்ஜிஆர் கட்சியை விட்டு போனபோதே கவலைப்படவில்லை. வைகோவை தூக்கி எறிந்தோம். திமுக தேம்ஸ் நதி மாதிரி. யார் வந்தாலும் யார் போனாலும் அதை பற்றி கவலை இல்லை. 70 வருடமாக திமுக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் நூறு ஆண்டுகள் ஓடும் என்றார் .
தருமபுரம் ஆதீனம் பட்டணப்பிரவேசத்திற்கு தமிழக அரசு தடையை நீக்கியது குறித்த கேள்விக்கு, பல்லாக்கு அனுமதி விஷயத்தில் எது நியாயமோ, எது ஏற்றதோ, எதை சமுதாயம் ஏற்குமோ அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செய்திருக்கிறார் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu