தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செப். 22ல் துவக்கம்

தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செப். 22ல் துவக்கம்
X

அண்ணா அறிவாலயம்.

தி.மு.க. வில் மாவட்ட செயலாளர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 22ல் துவங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க.வில் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி கிளை கழகம் மற்றும் நகரம் பகுதி ஒன்றியம், பேரூர் மாநகர நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது.செப்.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் அதன்படி மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் சில மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் தி.மு.க. உட்கட்சி தேர்தல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!