திமுக எம்.பி.யின் மகன் சாலை விபத்தில் பலி; இன்னொருவர் படுகாயம்

திமுக எம்.பி.யின் மகன் சாலை விபத்தில் பலி; இன்னொருவர் படுகாயம்
X
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன், சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். புதுச்சேரி அருகே, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கார் நொறுங்கியது. அதில் பயணித்த எம்.பி. இளங்கோவின் மகன் ராகேஷ், வயது 22, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த இன்னொருவர், படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக எம்.பி.யின் மகன், சாலை விபத்தில் உயிழந்த சம்பவம், அக்கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story