உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி அடையும் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி அடையும் என நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார்.
மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமது வாக்கினை பதிவு செய்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், திமுக ஆட்சியையம் தமிழக சட்டமன்றத்தை முடக்க போவதாக கூறிவரும் அதிமுகவினர் பற்றி கேட்ட போது ,ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டமன்றத்திற்கு வராத 18 பேரை நீக்கி வைத்து விட்டு,கட்சிக்கு எதிர்த்து வாக்களித்த 12 பேரை சட்டத்திற்கு விரோதமாக மன்றத்திற்கு உள்ளே வைத்து விட்டு ஊழலுக்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள்,ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி பெற்ற அரசை முடக்க போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ?
சாத்தியமில்லை, அடிப்படை அறிவு இல்லாமல் சொல்லப்படுகிற வாதம் ஆகும்.ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்கிறார்கள்.பத்திரப்பதிவில் மதுரையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது .கோவில் நிலத்தியிலேயே ஆக்கிரப்பு செய்து பதிந்த நிகழ்வுகளும் நடைபெற்றது.அப்படி இருக்கும் போது மதுரையில் பத்திர பதிவிற்கு தகவல் பற்றாக்குறை உள்ள போது ஒரே நாடு ஒரே பதிவு என்றால் உதாரணமாக குஜராத்தில் உள்ளவர்கள் மதுரையில் உள்ள கோவில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்தால் என்ன செய்வது ?
உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது ?
முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி அடையும் .
அதிமுகவினர் பணம் கொடுப்பதாக தகவல் வருகிறதே ?
என்னைப் பொறுத்தவரை வாக்கிற்கு ஒரு ரூபாய் பணம் கூட கொடுக்காமல் வெற்றி பெற்றவன் என்பதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு செயல்படுபவன்.
ஜி.எஸ் டி கூட்டத்தில் தங்களது உரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியாக சொல்கிறார்களே ?
ஒளிவுமறைவாக ,புள்ளி விபரம் இல்லாமல் ,நாளைக்கு நிரூபிக்க முடியாத கருத்தை பேசினால் இந்த மாதிரி பேசலாம்.கூட்டத்தில் தகவலோடு உரையாற்றி என்னோட வாதத்தை அறிக்கையாக சமர்ப்பித்து இருக்கிறேன்.இதனை பிரச்சனையாக்குவதாக சொன்னால் ஜி எஸ் டி நிலைக்குழுவில் என்னை ஏன் உறுப்பினராக போட்டார்கள் .வதந்தி ஊடகங்களில் வரலாம் .என்னைப் பொறுத்தவரை தெளிவாக சொல்கிறேன் ஒன்றிய நிதி அமைச்சராக இருந்தாலும் ஒன்றிய நிதித்துறை செயலாளராக இருந்தாலும் பல மாநிலங்களில் உள்ள நிதி அமைச்சர் ,முதல்வர் ,துணை முதல்வர்களோடு இணைந்து பேசி நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் செயலாற்றிக்கொண்டு இருக்கிறோம் .நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நானும் மகாராஷ்டிரா சுற்றுசூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே , மேகாலயா சுற்றுசூழல் துறை அமைச்சர் சங்மா கலந்து ஆலோசித்தோம் .அனைவரும் ஒரே மாதிரியான கருத்தை எடுத்துரைத்தோம் செயல்பட வேண்டியது மாநிலங்கள் ,மாவட்டங்கள் ,உள்ளாட்சிகள் .இதனை வைத்துதான் கட்டமைப்பை திருத்த முடியும் எல்லாவற்றையும் ஒரே ஒரே என்று டெல்லியில் இருந்து செய்ய முடியாது எனச்சொன்னோம் . இத்தனைக்கும் மேகாலயாவில் பாஜக கூட்டணியில் இருக்கிற அரசு . எனவே உண்மையை யார் சொன்னாலும் உண்மை தான்.எந்த குறையும் சொல்ல மாட்டேன் .ஆட்சி மாறியதால் மாறி விடப்போவதில்லை .சில சமயம் நேரத்தை சரியாகவும் சில சமயம் தாமதமாகவும் கொடுக்கிறார்கள்..என்னை பொறுத்தவரை தேர்தலை சந்திக்கும் போது சொன்ன 2003 ல் பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டம் வந்த பிறகு 2014 வரைக்கும் சில வருடம் அம்மையார் ஆட்சி அதன் பிறகு ஐந்து வருடம் தலைவர் கலைஞர் ஆட்சி .2003 ல் இருந்து 2014 வரை நிதி நிலை சட்டத்திற்கு ஏற்ப இருந்தது .வருவாய் கணக்கில் பற்றாக்குறையே கொஞ்சம் உதிரியோ இருந்தது .2014 க்கு பிறகு அம்மையார் சிறைக்கு சென்ற பிறகு சரியான தலைமை இல்லாததால் ஏழு ஆண்டுகளில் நிதி நிலைமை சரிந்து போனது வருவாய் பற்றாக்குறை அதிகரித்து கடன் வாங்க கூடிய எல்லையை மீறி சுமார் 30 ஆயிரம் கோடியை ஒளிவு மறைவாக எடுத்துள்ளார்கள் என்பதை வெள்ளை
அறிக்கையில் காண்பித்து உள்ளேன் .அந்த அளவு இருந்த சூழ்நிலையை சிறந்த தலைமை திருப்பி வந்த பிறகு சிறந்த முதலமைச்சர் வந்த பிறகு ஒரே ஆண்டில் இரண்டாவது அலையை தாண்டி மூன்றாவது அலையை தாண்டி முதல் முறை ஆட்சிக்கு வந்தவர் என்ற அனுபவ குறையை தாண்டி பால்விலை குறைப்பு ,பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ,பெட்ரோல் விலை குறைப்பு ,மகளிர் சுயஉதவி குழு கடன் 2600 கோடி தள்ளுபடி,குடும்ப அட்டைதாரருக்கு 4000 என பல வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிறகுஇந்த ஆண்டு நிதி நிலைமை சீர்திருத்தத்தை காண்பிக்க போகிறோம் .இது தான் சிறந்த தலைமையின் அடையாளம். இதன் வெளிப்பாட்டை விளைவை வைத்து யாருடைய ஆட்சி சிறந்தது என்பதை மக்கள் முடிவெடுக்கட்டும்.
பெண்களுகளுக்கன ஊக்கத்தொகை எப்போது கொடுக்கப்படும் ?
முதலமைச்சர் உறுதியாக கொடுக்கப்படும் என கூறி உள்ளார்கள் ..அவர் கட்டளையில் பணியாற்றுபவன் நான் .என்றைக்கு அளிக்க சொல்கிறாரோ அன்று ஏற்பாடு செய்ய வேண்டியது எனது கடமை
நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும் ?
ஒரு பட்ஜெட் என்பது வரக்கூடிய ஆண்டிற்கான இலக்கு .ஏற்கனவே நான் எழுதியுள்ள கட்டுரையில் பட்ஜெட்டிற்கும் அதன் பிறகு திருத்திய மதிப்பீட்டிற்கும் சுமார் 40 முதல் 50 சதவிகிதம் வேறுபாடு உள்ளது .இதனை மாற்றி விளைவை அடிப்படையாக வைத்து இந்த வருடத்தின் கணக்கை ஒழுங்காக காண்பித்து இதுதான் தலைமையின் பலன் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் .தலை இல்லாத வால்கள்,கால்கள் ஆட்சி நடத்தியதால் நிதி நிலைமை சரிந்தது .வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம்.வாரம்தோறும் இதற்கான கூட்டம் நடத்தி கோப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து திருத்திக்கொண்டு வருகிறோம் .அதனை செம்மையாக செய்து முடிப்போம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu