சென்னையில் உதயநிதி தலைமையில் திமுக உண்ணாவிரத போராட்டம்

சென்னையில் உதயநிதி தலைமையில் திமுக உண்ணாவிரத போராட்டம்
X

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டம்.

சென்னையில் உதயநிதி தலைமையில் திமுக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாநிலம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுகிறது. மதுரையில் மட்டும் வருகிற 23ம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழக ஆளுநரை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழக ஆளுநரை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை, அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். போராட்டத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்பி தயாநிதி மாறன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மதுரையை தவிர அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!