ஆதீனத்தை தொட்டு பாருங்கள் பார்ப்போம்: அண்ணாமலை சவால்

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
Annamalai BJP - மதுரை பழங்காநத்ததில் மதுரை மாநகர பாஜக சார்பில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை கூறியதாவது: திமுக ஆட்சியில் இருட்டு நிலவி வருகிறது. சினிமாவில் மாடல் போல நடிப்பதே, திராவிட மாடல். முதல்வர் எதற்கெடுத்தாலும் நடித்து வருகிறார். காவல்நிலையத்தில் திடீர் ஆய்வின் போது எப்படி ஆளுங்கட்சி கேமரா மட்டும் செல்கிறது என தெரியவில்லை.
திமுகவின் ஊழலை சுட்டிக் காட்டியதால் ஒர் ஆண்டில் என் மீது 625 கோடி ரூபாய் அளவிற்கு மான நஷ்ட ஈடு வழக்கு போடப்பட்டுள்ளது. எத்தனை வழக்கு போட்டாலும் பேசுவதை பேசிக்கொண்டே இருப்பேன். தட்டிக்கேட்பதை தட்டிக்கேட்க தான் செய்வேன்.
சேகர் பாபு என்றைக்கு ஆதீனத்தை தவறாக பேச ஆரம்பித்தாரோ அன்றைக்கு கதை காலியாக போகிறது என்று அர்த்தமாகிவிட்டது. ஆர்எஸ்.பாரதி, என் ஜாதக கட்டம் குறித்தெல்லாம் பேசுகிறார். கடவுள் நம்பிக்கையற்ற திமுக அமைச்சர்களுக்கு கடவுள் மீது, ஜாதகம் மீது என்ன திடீர் அக்கறை?`
கோயில் பணம் மீது திமுகவுக்கு கண். சாமிக்கு பின்வரும் உண்டியல் மீது திமுகவுக்கு கண் என மதுரை ஆதீனம் பேசியதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் ஆதீனத்தை மட்டும் தொட்டுப்பாருங்கள். மதுரை மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பாருங்கள்.
பின்னர் பாஜக செய்வதை அடுத்து பாருங்கள். பிரதமர் மோடி செய்வதையும் பாருங்கள்.
ஆதீனம், சன்னியாசி, முனிவர்களை பற்றி திமுக அரசு தவறாக பேசி வருகிறது. மதுரை ஆதீனம் என்ன தவறாக பேசி விட்டார்? தமிழக அரசு ஆதீனத்தை தொட்டு பாருங்கள் பார்ப்போம். மதுரை ஆதீனத்தை மிரட்டி அடி பணிய வைக்க திமுக நினைக்கிறது. ஆதீனத்துக்கும், பாஜகவும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்கள் பக்கம் ஆதீனம் இருப்பதால் நாங்கள் ஆதரவு தருகிறோம் என பேசினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu