மாநிலங்களவை தேர்தல்: காங்கிரசுக்கு ஒரு இடம்

மாநிலங்களவை  தேர்தல்: காங்கிரசுக்கு ஒரு இடம்
X

மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள்

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர். காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியானதைத் தொடர்ந்து, ஜூன் 10ம் தேதி 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், திமுக சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர். ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில், தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி