தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விண்ணைத் தொட்ட விமானக் கட்டணம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விண்ணைத் தொட்ட விமானக் கட்டணம்
X

பைல் படம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்தும், பல்வேறு நகரங்களிலிருந்தும் தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்துள்ளனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

மேலும் மக்கள் விமானங்களில் பயணிக்க தற்போது ஆர்வம் காட்டி வருவதாலும், ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் அதிகரிப்பின் காரணமாகவும் விமானக் கட்டணம் பலமடங்கு உயர்ந்து விண்ணைத் தொட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், விமானக் கட்டணம் பலமடங்கு உயர்ந்து விண்ணைத் தொட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தீபாவளியைக் கொண்டாட சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து டிக்கெட்டுகள் கிடைக்காத நிலையில், தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளிலும் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உள்ளதாகக் கருதுவதால் விமானப் பயணத்தை விரும்புகின்றனர்.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள், சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவை செல்லும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். நவம்பர் 10, 11 தேதிகளுக்கான விமான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்பனையான நிலையில், ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே காலியாக உள்ளன.

சென்னை - சேலம் இடையே வழக்கமாக ரூ.2,390 விமானக் கட்டணமாக இருந்த நிலையில், நவம்பர் 10, 11 தேதிகளில் ரூ.11,504 விமானக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து ரூ. 13,287, கோவைக்கு ரூ. 13.709 என விமானக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.13,086, மதுரைக்கு ரூ.13,415 விமானக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களில் பலரும் விமானத்தில் பயணம் செய்ய விரும்புவதால், சென்னையில் இருந்து தூத்துக்குடி, சேலம், திருச்சி மதுரை, கோவை ஆகிய ஊர்களுக்கான உயர் வகுப்பு விமானக் கட்டணம் விண்ணைத் தொட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!