8 மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு

பைல் படம்.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகளை கூண்டோடு கலைக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி மாவட்டங்களில், கீழ்க்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது.
இதனையடுத்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
கட்சி மாவட்டங்களின் பெயர்கள்:
திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு.
புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்:
திருநெல்வேலி- கட்டளை S. ஜோதி, நாகப்பட்டினம்- T.வரதராஜன், சென்னை மேற்கு- T.N.பாலாஜி, வட சென்னை மேற்கு- மனோகரன், கோயம்புத்தூர் நகர்- A.P.முருகானந்தம், புதுக்கோட்டை- செல்வம் அழகப்பன், ஈரோடு வடக்கு- S.M.செந்தில்குமார், திருவண்ணாமலை வடக்கு - C.ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu