மகர ஜோதியை காண சபரிமலைக்கு வருகை தந்த இயக்குநர் விக்னேஷ் சிவன்

மகர ஜோதியை காண  சபரிமலைக்கு  வருகை தந்த இயக்குநர் விக்னேஷ் சிவன்
X

மகரஜோதி காண சபரிமலை வந்திருந்த இயக்குநர் சந்தோஷ் சிவன் 

சபரிமலையில் மகர விளக்கு பூஜை ஒட்டி மலையாள சினிமா நடிகர் திலீப் மற்றும் விக்னேஸ் சிவன் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி தினத்தன்று சபரிமலை மகர ஜோதி காணப்படுகிறது. எனவே இது சபரிமலை மகரவிளக்கு அல்லது மகர ஜோதி என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஜோதியை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியன்று லட்சக்கணக்கான மக்கள் சபரிமலை மலைக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகர ஜோதி கட்டம் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை நடைபெறுகிறது

சபரிமலை சன்னிதானம் அமைந்திருக்கக் கூடிய பகுதிகளில் 10 இடங்களில் பக்தர்கள் தங்கி மகரஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த ஆண்டு சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பல்வேறு பகுதிகளில் 4000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

மகரஜோதிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்க பந்தளம் அரண்மனையில் இருந்து கடந்த 13ஆம் தேதி திரு ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் எடுத்து வரப்பட்டது. இன்று காலை நிலக்கலுக்கு கொண்டுவரப்பட்ட திரு ஆபரண பெட்டிகள் அங்கிருந்து பெரியானை வட்டம் வழியாக நீலிமலை சரங்குத்தியை வந்து அடைந்தது

திரு ஆபரண பெட்டியை பெற்றுக்கொண்ட தேவசம் கூட அதிகாரிகள் அங்கிருந்து எடுத்து வந்து பதினெட்டாம்படி வழியாக சன்னிதானம் கொண்டு வந்து மூலவர் ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலயத்தில் மணி ஓசை எழுப்பப்பட்டது. சரியாக ஆறு நாற்பது மணியிலிருந்து 6 45 மணிக்குள் பொன்னம்பலம் எப்படி மூன்று முறை ஜோதி தெரிந்தது அதை கூடி இருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி வணங்கினார்கள்.

சன்னிதானம் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்களும் பம்பை நிலக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் என மொத்தம் நான்கு லட்சம் பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்து இருப்பதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலையில் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் பொன்னம்பல மேட்டில்ஜோதி தரிசனம் செய்தனர். சபரிமலை மகரஜோதியை சினிமா பிரபல நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!