கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம்

கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம்
X

கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் செய்த பெண்

கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் தடுக்கும் மாமியார், நாத்தனார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது விட்டல் நாயக்கன்பட்டி . இப்பகுதியை சேர்ந்தவர் ராஜசத்தினம். இவரது மனைவி தமிழ் செல்வி. இவர்களுக்கு உமா மகேஸ்வரி என்ற மகளும், வீரக்குமார் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் வீரக்குமார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் பயின்ற மதுரையை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துள்ளார். அலைபாயுதே சினிமா படத்தை போல இரண்டு பேரும் தனித்தனியே அவரவர் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஜீவா வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது அவரது வீட்டாருக்கு மகளுக்கு பதிவு திருமணம் நடந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இரண்டு வீட்டாரும் பேசி முறைப்படி பெரியோர்கள், உறவினர்களையும் அழைத்து திருமணம் நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்து சில மாதங்களிலே ஜீவா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணங்கள் காட்டி வீரக்குமார் தாயார் தமிழ்செல்வி, அக்கா உமா மகேஸ்வரி ஆகியோர் கணவன் மனைவியை பிரித்து வைக்க முற்பட்டனர். மேலும் வரதட்சனை கேட்டும் கொடுமை படுத்தி உள்ளனர். இதுகுறித்து கடந்த ஆண்டு வடமதுரை காவல் நிலையத்தில் பெண் வீட்டார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வீரக்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து விசாரணை நடத்தி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனவும், இதற்கு மாமியார் தமிழ்செல்வி இடையூறு செய்ய கூடாது என கூறி அனுப்பி வைத்தனர். பின்னர் கணவர் வீரக்குமார் மனைவி ஜீவாவிடம் உங்களுடைய வீட்டில் இரு வந்து அழைத்து செல்கிறேன் என கூறி அனுப்பி வைத்துள்ளார். ஒரு வருடமாக அழைத்து செல்கிறேன் என கணவர் கூறி ஜீவாவை ஏமாற்றி உள்ளார். பின்னர் பெண் வீட்டார் உறவினர்கள் எல்லாம் வீரக்குமாரிடம் பேசி உள்ளனர்.

இந்நிலையில் வீட்டிற்கு தனது மனைவியை வரும் படி கூறியதையடுத்து பெண் வீட்டார் ஜீவாவை திண்டுக்கல் மாவட்டம் விட்டல் நாயக்கன்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த ஜீவாவை வெளியே சென்ற மாமியார் தமிழ்செல்வி வீட்டில் இருந்த தனது மருமகளை ஜாதியை சொல்லி திட்டியும் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டு கதவை அடைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவா தனது கணவருடன் சேர்ந்து வாழ இடையூறாக உள்ள மாமியார் தமிழ்செல்வி, நாத்தனார் உமாமகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது கணவர் வீரக்குமாரும் அவரது தாயார் தமிழ்செல்வியும் தப்பி ஓடினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!