வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் பரமசிவம் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் பரமசிவம் இன்று தட்டாராம்பட்டி, அடைக்கனூர் , பாறையூர், சொக்கலிங்கபுரம், கூவக்காபட்டி, அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்து கூறியும், தற்போது 2021 சட்டமன்ற தேர்தல் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளான வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மாதம் குடும்ப பெண்மணிகளுக்கு ரூ. 1500 வழங்குதல் , முதியோர், மாற்று திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள் உள்ளிட்டோருக்கான நிதி உதவி உயர்ந்தி வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்தார். முன்னதாக வேட்பாளர் பரமசிவம் செல்லும் இடமெல்லாம் இரட்டை இலை கோலங்கள் இட்டும், வெடி வெடித்தும் , ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story