மாணவிகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளி கல்லூரிகளில் விசாகா குழு

மாணவிகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளி கல்லூரிகளில் விசாகா குழு
X

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன்.

மத்திய அரசைக் கண்டித்து பிப். 23, 24 ல் அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மாணவிகள் மீது பாலியல் வன்முறை நடைபெறுவதை தடுக்க பள்ளி கல்லூரிகளில் விசாகா குழுக்களை அமைத்திட மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டுமென வேடசந்தூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட 23வது மாநாடு வலியுறுத்தியுள்ளது.

வேடசந்தூரில் செவ்வாய் மற்றும் புதன் கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:குழந்தைகள் ஆணைய செயலாளர் நியமித்திடுக தமிழகத்தில் சமீப காலமாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. நூற்றுக்கணக்கான போக்சோ வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் தொடர் தலையீடு செய்ய வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தேசிய குழந்தைகள் நல உரிமைகள் ஆணையத்திற்கு இதுவரை செயலாளர் நியமிக்கப்படாத நிலை உள்ளது.எனவே தமிழ்நாடு அளவிலான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தமிழ்நாடு பிரிவிற்கு செயலாளர் உடனடியாக நியமிக்க தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் 23வது திண்டுக்கல் மாவட்ட மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது.

கல்விநிலையங்களில் விசாகா குழு திண்டுக்கல் மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேடசந்தூர் தொட்டணம்பட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கிண்ற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வடமதுரை குப்பைபட்டியைச் சேர்ந்த 6வயது சிறுமி டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

தற்போது பாச்சலூரில் 10 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 473 பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், படுகொலை என போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் ஆனால் வழக்குகளிலிருந்து குற்றவாளிகள் ஜாமீனில் எளிதாக வந்துவிடுகிற நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் க்ல்வி நிலையங்கள், பணித்தளங்களில், பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கு விசாகா குழுவை நியமிக்க முன்வரவேண்டும் என்று மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் கார்பரேட்டுக்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகள், தொழிலாளர் விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி மாதம் 23, 24 தேதிகளில் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்திட இந்த மாநாடு ஆதரவு தெரிவித்துள்ளது.

பெரியம்மாபட்டி விவசாயிகளுக்கு பட்டா பழனி வட்டம் பெரியம்மாபட்;டியில் நரேந்திரா டயரி நிறுவனத்திடமிருந்து நிலத்தை அரசு கையகப்படுத்தப்படடது.தற்போது அந்த நிலம் உபரி நிலம் 3199.14 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளாக 600 விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

2004ம் ஆண்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக சட்டவிரோத நில ஆக்கிரமிப்பாளர்களின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. உண்மையான விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். இதே போல் இரவிமங்கலம், தும்மலப்பட்டி கிராமங்களில் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.

ஆண்டிபட்டியில் ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க முயலும் மில் அதிபர் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநாடு கேட்டுக்கொள்கிறது. 58 கோடி பழனி நகராட்சி ஊழல் பழனி நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.58 கோடியில் மழை நீர். கழிவு நீர் ஓடைகள், சாiலை அமைப்பதில் நடைபெற்ற ஊழலை கண்டித்து பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த ஊழல் குறித்து விசாரணைக் குழு அமைத்து ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்லில் புறநகர் பேருந்து திண்டுக்கல் மாநகராட்சியில் வாகன போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் புறநகர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

பஞ்சமி நிலத்தில் வீட்டடி மனை ஒட்டன்சத்திரம் வட்டம் மண்டவாடி கிராமத்தில் 7 ஏக்கர் 30 சென்ட் பஞ்சமி நிலம் உள்ளது.இந்த நிலத்தை அப்பகுதியில் உள்ள 130 தலித் மக்களுக்கு தலா 3 சென்ட் வீட்டடி மனைகளாக பிரித்து வழங்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

காலனி வீடுகளை மராமத்து செய்திடுக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுப்பு வீடுகளை மராமத்து செய்திட பயனாளிகளுக்கு அந்த அந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் தொகுதி நிதியிலிருந்து தலா ரூ.25 ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும். புலையர் சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்த்திடு பழங்குடி இனத்தைச் சேர்ந்த புலையர் சமூக மக்களை பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும்.மலைவேடன் சமூக மாணவ, மாணவியர்களுக்கு பழங்குடியின சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்;ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!